நாரத ராமாயணத்தில் கிண்டலுக்கும் நகைச்சுவைக்கும் அப்பால் புதுமைப்பித்தனை வதைக்கும் துக்கத்தைக் காண முடியும். மதத்தால் பயன்படுத்திக்கொள்ளப்படும் மக்களுக்கு ஒன்றும் கிடைப்பதில்லை. இதிகாசமும் கற்பனையும் இணைவது யதார்த்தத்தை முன்னிலைப்படுத்துவதற்காகத் தான். பெயர்களை வெறும் பாத்திரங்களாகக் கொள்ளாமல் caricature ஆகவும் குறியீடுகளாகவும் பார்த்தால் படைப்பின் பரிமாணங்கள் இடம், காலத்தை மீறி உண்மைகளைச் சொல்லும். - என். சிவராமன்
வாசிப்பு என்கிற தொடர்நிகழ்வின் மூலமே, படைப்பின் அசைவியக்கம் நிகழ்கிறது. இந்த வாசிப்பே பிறிதொரு படைப்பாகவும் அமையலாம். இத்தகைய படைப்பின் தொடர் சங்கிலியாக, படைப்பு பிறிதொரு படைப்பை உருவாக்குகிறது. இத்தகைய பிரதியியல் பெருக்க வினையை நிகழ்த்தும் படைப்பாக இராமாயணம் இருப்பதைக் கண்டுகொண்டிருப்பதிலும், அதன் வினையை நிகழ்த்த முனைவதிலும்தான் நாரத ராமாயணம் நம்மைக் கவர்வதாக இருக்கிறது. - ஜமாலன்
இந்திய வரலாற்று நிகழ்வுகளைப் பாரபட்சமின்றி கிண்டலாக விமர்சிக்கிறார் புதுமைப்பித்தன். - ராஜமார்த்தாண்டன்
புதுமைபித்தனின் பகடி எழுத்தின் உன்னதம் இதுவே என்பேன். - எஸ். ராமகிருஷ்ணன்
Be the first to rate this book.