மாற்றத்துக்கான முதல் படி வீடுகளிலிருந்தும் கல்விக்கூடங்களிலிருந்தும்தான் தொடங்க வேண்டும். அதுதான் சமூக மாற்றத்துக்கும் இட்டுச் செல்லும் பாதையாக இருக்கும். பசித்தால், பிடித்தால் கூடுதலாக ஒரு தோசை சாப்பிடலாம் என்னும் நம்பிக்கையை ஒரு பெண் குழந்தைக்குத் தரும் சமூகம்தான் உண்மையிலேயே மேம்பட்ட சமூகம். அந்த வகையில் வகுப்பறைகளிலேயே சமத்துவத்தை ஆழமாகவும் அதேநேரம் அவர்களது மொழியிலும் அறிமுகப்படுத்தும் இந்த நூல், எளிமையாகத் தோன்றினாலும் மிக மிக முக்கியமானதொரு முயற்சி. ஒவ்வொரு நூலகத்திலும் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம் இது. பெண் குழந்தைகளுக்கு மட்டுமன்றி சமத்துவம் பற்றிய புரிதலின் பொருட்டு அனைத்துக் குழந்தைகளுக்கும் அவர்களுடன் உரையாடலை நிகழ்த்தும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இந்த நூல் போய்ச் சேர வேண்டும்.
- கவிதா முரளிதரன்
Be the first to rate this book.