சிறந்த கருத்துகளை நீதி போதனையாகச் சொல்லாமல், சுவாரசியமான கதைகள் மூலம் சொல்லும்போது, குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்வார்கள். வாசிக்கும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி தரும் இக்கதைகள், சிறந்த வாழ்வியல் பண்புகளை அவர்கள் மனதில் விதைக்கும் வண்ணம் அமைந்திருப்பது சிறப்பு!
நான் யார்? சிறார் கதைத் தொகுப்பிலுள்ள பெரும்பாலான கதைகளில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான காடும், விலங்குகளும் இடம் பெற்றுள்ளமை சிறப்பு. மாயா வளர்க்கும் ‘பக்கி’ சுண்டெலியின் குறும்புகளைச் சிறுவர்கள் ரசிக்கும் விதமாகச் ‘சுண்டெலிக்குத் தெரிஞ்சு போச்சு!’ என்ற கதையில் சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர் (மாயா போலச் சுண்டெலியும் சோப்பு போட்டுக் குளிக்கின்றது!). காட்டு விலங்குகளுக்கு இடைஞ்சல் செய்யும் குறும்பு யானை பப்புவின் குறும்புகள் எத்தகைய ஆபத்தை ஏற்படுத்தியது என்பதையும் அதிலிருந்து எப்படித் தப்பித்தது என்பதையும் ஆர்வமூட்டும் விதத்தில் சொல்லியிருக்கிறார்.
Be the first to rate this book.