இப்புத்தகம் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் என்பது மட்டுமல்ல, முப்பத்திமூன்றரை வருடங்கள் காக்கியுடுத்து ஒரு காவலராக நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவர் அப்பட்டமாகத் திறந்து காட்டும் ஒரு வேதனைமிகுந்த வாழ்க்கைக் கதையும் என்பதுதான. இந்தச் சாதாரண மனிதன் காக்கி உடையின் அரசியல் என்னவென்பதை நெஞ்சைத் தொட்டு இந்த சுயவரலாற்றினூடே வெளிப்படையாக அறிவித்துக்கொள்கிறார். மனோரமா வார இதழில் வெளியான பழைய ஒரு டோம்ஸ் கேலிச் சித்திரத்தையும் நினைவுக்கு கொண்டு வருகிறார். நான்கு மனிதர்களும் ஒரு காவலரும். காவலர் ஏன் ஐந்தாவது மனிதனாக ஆக முடியவில்லை. ராமச்சந்திரன் நாயர் சொல்கிறார்.
"நீங்கள் இவ்வளவு சம்பளம் கொடுத்துப் பாதுகாக்கும் காவல்துறை எப்படி நடந்து கொள்கிறதென்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதையறிந்து கொள்வதற்கான உரிமை உங்களுக்கு உண்டு. உங்களிடமிருந்து சம்பளம் வாங்குபவர்கள் நாங்கள். உங்களால் நிலைபெற்றிருக்கிறது இங்குள்ள அமைப்புகள். காக்கியென்றால் என்னவென்பதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும். "
இந்த சுய ஒப்புதலை வாசிக்கத் துவங்கும் நாம் ஒரு காவலரின் வாழ்க்கையைப் பற்றி மட்டுமல்ல, நமது காவல்துறையைப் பற்றியும் அறிந்து கொள்கிறோம். நம் மொழியில் இதற்கு முன் இப்படியொரு அறிமுகம் நடந்ததில்லை. ஆகவே, நமக்கு இந்தச் சுயசரிதை ஒரு சாதாரண காவலரின் திடுக்கிடச் செய்யும் சுய அறிவிப்பாகவும் மாறுகிறது.
- சிவிக் சந்திரன்
Be the first to rate this book.