புலவர் கீரனை போன்றே எழுத்தாற்றலும், பேச்சாற்றலும் மிக்க அவரது துணைவியார் செல்லப்பாப்பா கீரன், தம் கணவருடன் ஏராளமான விழாக்களுக்கு சென்று வந்ததோடு, அவருக்கு அறிமுகமான பெரும்பாலான சான்றோர்களையும் நன்கு அறிந்தவர்.
இந்த நூலில், காஞ்சி பீடாதிபதி துவங்கி, திருப்பனந்தாள் எஜமான் சுவாமிகள், ம.பொ.சி., – கி.வா.ஜ., குன்றக்குடி அடிகளார், அ.ச.ஞா., ராஜா சர்.எம்.ஏ. முத்தையா செட்டியார் என, 68 சான்றோர்களைப் பற்றிய சிறுசிறு கட்டுரைகள் தந்துள்ளார். புலவர் கீரனின் இல்லத்தரசியின் இனிய இலக்கிய பதிவுகளாக இவை திகழ்கின்றன.
Be the first to rate this book.