இந்த உலகிலேயே மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட, மிக அதிக அவதூறுகளுக்கு ஆளாக்கப்பட்ட பேரியக்கங்களில் ஒன்று ஆர்.எஸ்.எஸ். இந்துக் கலாசாரத்தை மதிப்பவர்களிடமும் இந்தியாவைத் தாய் நாடாக நேசிப்பவர்களிடமும் ஆர்.எஸ்.எஸ் எத்தகைய மகத்தான தாக்கத்தை ஏற்படுத்துகிறது; தேச விரோத, இந்து விரோதச் செயல்களுக்கு எந்த அளவுக்குப் பெரும் தடையாக இருக்கிறது என்பதையெல்லாம் நன்கு புரிந்து வைத்திருப்பதால்தான் ஆர்.எஸ்.எஸ் எதிர்க்கப்படுகிறது.
தனது உண்மையான இலக்கு என்ன, கோட்பாடு என்ன என்பது பற்றியெல்லாம் பொதுவெளியில், ஊடகங்களில், கல்விப் புலங்களில் ஆர்.எஸ்.எஸ் பேசுவதே இல்லை. ஆர்.எஸ்.எஸின் பலமும் அதுவே, பலவீனமும் அதுவே. இந்நிலையில், ஆர்.எஸ்.எஸைப் பற்றிய உண்மைகளை உலகுக்கு எடுத்துச்
சொல்லவேண்டும் என்ற எளிய நோக்கில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. தனது ஷாகா அனுபவங்களின் அடிப்படையில் ஓர் அம்பேத்கரியராக இந்த நூலை ம.வெங்கடேசன் எழுதியிருக்கிறார்.
Be the first to rate this book.