‘பேரலல் யூனிவர்ஸ்’ எனப்படும் இணைப் பிரபஞ்சம் குறித்த பேச்சுகள் தமிழில் இன்னும் அதிகம் உருவாகவில்லை. ஆங்கிலத்தில் இதுகுறித்து ஏராளமான திரைப்படங்களும் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் வெளிவந்துவிட்டன. ‘பிக் பாங்’ வெடிப்பு ஏற்பட்டு நம் பிரபஞ்சம் உருவான அடுத்த நொடியே இன்னொரு பிரபஞ்சமும் உருவானது என்கிறது இணைப் பிரபஞ்சக் கோட்பாடு. இதைப்போல மண்ணும் மனிதர்களும் உள்ள இன்னொரு பூமியும் இருக்கிறது என்றுகூடச் சொல்லப்படுகிறது. இங்கிருக்கும் ஒருவரைப் போலவே அங்கும் ஒருவர் இருப்பார். அவர்களை நாமோ நம்மை அவர்களோ சந்திக்கும் தருணம் நெருங்கிவிட்டது என்கிறார்கள். நாம் ரம்யாவாக இருக்கிறேன் அதற்கான சுவாரஸ்யங்களை ஆராயும் நாவல், சயின்ஸ் த்ரில்லர்.
Be the first to rate this book.