பிற மதங்களைப் போல இஸ்லாம் தன்னை ஏற்றுக்கொண்டவர்களுக்கு மரணத்திற்குப் பிந்திய வாழ்வை மட்டுமே இலக்காக வைத்து இயங்கும் மதமன்று. ஒரு மத நிறுவனத்தை மட்டுமின்றி இந்த உலகிலேயே நிறைவேற்றத்தக்க ஒரு சமூகத் திட்டத்தையும் முன்வைத்து இயங்குவதால் அது மிகவும் செயலூக்கத்துடன் வரலாற்றில் தலையிடுகிறது. நபிகள் ஒரு இறைத்தூதர் மட்டுமன்று. அவர் சமகால வரலாற்றில் தலையிட்ட ஒரு வரலாற்று நாயகரும்கூட. வாளெடுத்துப் போராடியவர். வாழ்நாளில் வென்று காட்டியவர்.
மானுடராக நம்முன் வாழ்ந்ததன் விளைவாகவும், சமகால வரலாற்றில் செயலூக்கமிக்க ஓரங்கமாக விளங்கியதன் அடியாகவும் அவரின் வாழ்வு வண்ணமயமானதாக விளங்குகிறது. ஏராளமான சம்பவங்கள். ஏராளமான மனிதர்கள். ஒரு இறைத்தூதராக மட்டுமின்றி நகைச்சுவை பேசி நண்பர்களோடு சிரிக்கிற, மகனின் மரணத்தில் அழுது குலுங்குகிற, காதல் வயப்படுகிற, மன்னிக்கும் மாண்புகள் நிறைந்த ஒரு சிறந்த மனிதராகவும் அவர் நம்முன் தோன்றுகிறார். இந்தப் பரிமாணங்களை முன்வைக்கும் அதே நேரத்தில் அவர் வாழ்வின் ஊடாகவும், அவர் வழி இறங்கிய திருக்குர்ஆனின் ஊடாகவும் வெளிப்படும் சில முக்கிய இறையியல் சிந்தனைகளையும் நான் புரிந்துகொண்ட வகையில் இங்கே முன்வைத்துள்ளேன்.
- முன்னுரையிலிருந்து
Be the first to rate this book.