1990 ல் 'புது வசந்தம்' படத்தில் இயக்குநராக அறிமுகமான விக்ரமன்,பதிமூன்று படங்களை இயக்கியவர். முதல் படத்திலேயே திரையுலகின் கவனத்தை மட்டுமின்றி திரை ரசிகர்களின் மனதையும் ஈர்த்தவர். கண்டதும் காதல், அடிதடி, ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள் போன்ற அம்சங்களை நிராகரித்துவிட்டு ஆண், பெண் நட்பு என்ற அற்புதமான கருத்தை முதல் படத்திலேயே துணிச்சலுடன் கையாண்டு வெற்றி கண்டவர். 'வானத்தைப் போல' படத்துக்காக 2000 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் சிறந்த பொழுதுபோக்குப் படத்துக்கான தங்கத்தாமரை விருதையும் வென்றவர். 'நான் பேச நினைப்பதெல்லாம்' விக்ரமனின் திரையுலக அனுபவங்களின் தொகுப்பு.
Be the first to rate this book.