பெண்கள் மீதும் பெண் குழந்தைகள் மீதும் திணிக்கப் படுகிற பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளை எதிர்த்து மாதராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்ம்மா என்ற பாரதியின் அற்புத வரிகளை இந்த நேரத்தில் நினைவு கூர்வோம். அந்த வகையில் பெண் குழந்தைகளை அடக்கி ஆளாமல், ஆண் - பெண் வேறுபாடு பார்க்காமல் சுதந்திரமாக வளர்வதற்கு அனுமதித்து, குடும்பத்தில் ஜன நாயகத்தை உறுதியாகக் கடைபிடித்தால் நாமும் நமது சமூகமும் இன்னும் பல முன்னேற்றங்களை காண முடியும். இதற்குச் சிறந்த உதாராணமாக இருப்பவள் மந்தாகினி. இந்தக் கதை முழுவதும் தான் நினைப்பதை விருப்பங்களை, ஏக்கங்களை, சந்தோசங்களை, கோபங்களைச் சொல்லி இப்புத்தகம் முழுவதும் நிறைந்திருக்கிறாள் மந்தாகினி. மந்தாகினியை படிப்போம், பகிர்வோம், சமத்துவத்தை நோக்கிப் பயணிப்போம்.
Be the first to rate this book.