மனத்தைப் புரிந்து கொள்ளவும் அதன் மர்மங்களைத் திரைவிலக்கவும் யார்தான் விரும்ப மாட்டார்கள்? ஏனெனில், மனம்தான் ஒரு மனிதனை இருபத்து நான்கு மணிநேரமும் கட்டுப்படுத்துகிறது. மனத்தின் சக்திக்கு எதிராகப் போகும்போது மனிதர்கள் செயலற்றுப் போகின்றனர். ஆனால், தங்களுடைய மனத்தை வெற்றி கொண்டுள்ள அறிவார்ந்த நபர்கள் மகிழ்ச்சி மற்றும் வெற்றியை அபரிமிதமாகக் கைவசப்படுத்தியுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, அத்தகையோர் வெகுசிலரே உள்ளனர். இந்நூலின் ஆசிரியரான தீப் திரிவேதி ஒரே ஒரு நோக்கத்துடன்தான் இந்நூலை எழுதியுள்ளார். தங்களுடைய மனங்களை வெற்றி கொண்டுள்ளோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், அதன் மூலமாக இவ்வுலகில் மகிழ்ச்சி மற்றும் வெற்றியைக் கைவசப்படுத்தியுள்ளோரின் சதவீதத்தை அதிகரிப்பதும்தான் அது. மனம் ஓர் எளிய விதியைப் பின்பற்றுகிறது: ‘மனம் உங்களை வெற்றி கொண்டுள்ளது என்றால், அது உங்கள் வாழ்வில் பேரழிவுகளை ஏற்படுத்தும். நீங்கள் உங்கள் மனத்தின் எஜமானாக ஆனால், அதே மனம் ஓர் அசாதாரணமான சக்தி மையமாக மாறும்.’
இப்புத்தகத்தில் கையாளப்பட்டுள்ள தலைப்புகளில் இவையும் அடங்கும்:
• மனத்திற்கும் மூளைக்கும் இடையேயான ஒற்றுமைகளும் வேற்றுமைகளும்
• மனத்தின் பல்வேறு நிலைகள்
• மனத்தின் அதிகார மையங்கள்
• வெற்றிக்கான திறவுகோல்கள்
• மேதமைக்கும் அறிவாற்றலுக்கும் இடையேயான வேறுபாடுகள்
தீப் திரிவேதி ஒரு பிரபலமான நூலாசிரியர் மற்றும் பேச்சாளர். தனிநபர்கள் தங்களுடைய முழு ஆற்றலையும் உணர்ந்து கொள்ள அவர்களை வழிநடத்துகின்ற வகையான நூல்களை எழுதுவதிலும் சொற்பொழிவுகளை நிகழ்த்துவதிலும் அவர் ஈடுபட்டுள்ளார். அவர் தன்னுடைய எழுத்துக்களிலும் சொற்பொழிவுகளிலும் பயன்படுத்துகின்ற ஆன்மிக-உளவியல் மொழியும் விளக்கங்களும் அவருடைய வாசகர்களின் மனங்களிலும் பார்வையாளர்களின் மனங்களிலும் ஓர் உடனடித் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இது அவரை இத்துறையில் ஒரு முன்னோடியாகத் திகழச் செய்கிறது.
Be the first to rate this book.