தமிழ்நாட்டில் மதச்சிறுபான்மை சமூகங்களுடைய உருவாக்கம் வட இந்தியாவைப் போல அல்ல இங்கே. மிகப்பெரிய கலைச்செல்வங்கள் உடைய கோயில்கள் இருக்கின்றனவே. இவற்றின் மீது இவற்றை உருவாக்கிவிட்டு இன்றைக்கு வேறு மதத்தில் இருக்கிற மக்களுக்கு ஒரு பங்கு இருந்ததல்லவா? அப்படியானால் அவர்கள் இதையெல்லாம் விட்டுவிட்டு ஏன் போனார்கள்?
போகவில்லை. அவர்கள் துரத்தப்பட்டார்கள் என்பதுதான் உண்மை. மழையிலும், வெயிலிலும் நின்றுகொண்டு இருக்கிற மக்கள் கோயிலுக்குள் நுழையமுடியாது, மழைக்குக் கூட நுழையமுடியாது. ஏனெனில் சாதியினால் தாழ்ந்தவர்கள். எந்தக் கோயில் திறந்திருந்ததோ அந்தக் கோயிலுக்கு அவர்கள் போய்விட்டார்கள்.
எனவே ''இங்கிருந்து துரத்தப்பட்டவர்கள்", என்று சொல்வதுதான் பொருத்தம்.
- நூலிலிருந்து
Be the first to rate this book.