உலக வரலாற்றில் இலக்கியத்தின் மூலம் அல்லது எழுத்தின் மூலம் இறவாப் புகழ் பெற்றவர்கள் என மிகச் சிலரையே சுட்டுதல் கூடும். அவ்வாறு காலம் கடந்தும் தூரம் கடந்தும் தம் புகழை நிறுவிக் கொண்டவர் உம்பர்ட்டோ ஈகோ.
உம்பர்ட்டோ ஈகோ(1932-2016) ஒரு தத்துவ ஞானியாகவும், ஊடகவியலாளராகவும், கதை சொல்லியாகவும் திகழ்ந்தவர்.
உம்பர்ட்டோ ஈகோ நம் தலைமுறையின் நிகரில்லாச் சிந்தனையாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். ஏராளமான கட்டுரை நூல்களையும் அவர் படைத்துத் தந்திருக்கிறார். அவற்றில் ஒன்று On Literature என்ற தொகுப்பு நூல். இலக்கியப் படைப்பின் உத்திகளையும், இலக்கியம் குறித்து நிலவி வரும் பல கருத்துக்களுக்கு மறுப்புகளையும், ஒரு சீரிய படைப்பின் அடையாளங்களையும் புதிய பார்வைகளையும் இந்தக் கட்டுரைகளில் அவர் தந்திருக்கிறார். தெளிவும் சுவையும் மிக்க ஒரு நேர்முகத்தையும் இந்த நூல் கொண்டிருக்கிறது.
உம்பர்ட்டோ ஈகோவின் நூலிலிருந்து ஏழு கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து மொழியாக்கம் செய்து தந்திருக்கிறார். திறனாய்வாளர் முனைவர் க. பஞ்சாங்கம் (1949). அவர் தேர்ந்த விமர்சகராகப் புகழ் பெற்றிருக்கும் பேராசிரியர்.
திறனாய்வுக்கான விருதுகள் பல பெற்றுள்ள பேராசிரியர் கவிதை நூல்களையும் படைத்துத் தந்துள்ளார். தில்லி சாகித்திய அகாதெமி பொதுக் குழு உறுப்பினராக விளங்கிய க. பஞ்சாங்கம் புதுவை பாரதி அன்பர்கள் அறக்கட்டளைத் தலைவராகத் திகழ்கிறார்.
Be the first to rate this book.