நம் உணர்வுகள்தான் நம்முடைய செயல்பாடுகளைத் தீர்மானிக்கின்றன. எந்த நேரத்தில் எந்த மனநிலையில் எதை உணர்கிறோமோ அப்படித்தான் செயல்படவும் செய்கிறோம். கோபமான நேரத்தில் மற்றவர் மீது எறிந்து விழுகிறோம். மகிழ்ச்சியான உணர்வின்போது நம்முடைய சந்தோஷத்தை மற்றவர்களிடத்தில் பகிர்ந்துகொள்கிறோம். அதேபோல, வெறுப்பு, சோம்பல், குற்ற உணர்வு, கவலை, பயம், மன அழுத்தம் என்று நம்முடைய ஒவ்வொரு மனநிலைகளின் போதும் அதற்கேற்ற உணர்வுகள்தான் வெளிப்படுகின்றன. இப்படி சிலநேரங்களில் சில உணர்வுகளுக்கு அடிமையாகவும் செய்கிறோம். அந்த உணர்வைக் கொண்ட மனநிலை என்ன நினைக்கிறதோ அதைச் செயல்படுத்துகிறோம். ஒழுங்குமுறை, கட்டுப்பாடு, தெளிவு இல்லாமல் காரியம் ஆற்றுகிறோம்.
Be the first to rate this book.