தமிழ். அது ஒரு மொழி மட்டுமல்ல. அதற்கும் மேலாக ஊனுடனும் உதிரத்துடனும் கலந்துவிட்ட ஓர் உணர்வு. மூவாயிரம் ஆண்டுக்கும் முற்பட்ட எங்கள் முன்னோர்களின் உயிராகவும் உணர்வாகவும் அது உருக்காட்சி அளிக்கிறது. நாடு என்ற எல்லைக்கு அப்பால் மக்கள் என்னும் மேடையில் அது தென்றலாய்த் தவழ்ந்து கொண்டிருக்கிறது. நெருக்குதல், தாக்குதல், விலக்குதல், பதுக்குதல் என்னும் பல்வேறு முடக்குதல்களைத் தாண்டி அது ஆலமரமாய் வேரூன்றி நிற்கிறது. எல்லா வகையான எண்ணங்களையும் உள்வாங்கிக்கொண்டு எல்லாவற்றுக்கும் மேலாகப் பட்டொளி வீசிப் பறக்கிறது. காலம் என்னும் கடலில் அது கலம் இல்லாமலே நீந்தி நிலைக்கிறது. இந்தத் தமிழ் உணர்வை உயிராய்க் கொண்டவர் சி.பா.ஆதித்தனார். ‘உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு;’ என்று முழங்கி வாழ்ந்தவர். அவர் தொடங்கி நடத்திய ‘நாம் தமிழர்’ இயக்கம் தமிழுக்கு அரணாக நின்றது; பிற மொழித் தாக்குதலை வேலியாய்த் தடுத்தது.
சி.பா.ஆதித்தனார் எழுதிய ‘தமிழப் பேரரசு’ நூல் அடங்கிய பதிப்பு.
Be the first to rate this book.