காதலும் அதன் பின்னரான தனிமையும்,நிலம் விட்டேகிய ஆற்றாமையின் இருள்வெளியும் விரவிக்கிடக்கும் மயூ மனோவின் சொற்கள் புலம்பெயர்ந்து வாழும் அவருடைய தலைமுறையின் சாட்சியம். வீட்டின் கதவுகளுக்கு உள்ளே பிறந்த நிலத்தின் கலாச்சாரத்தையும் கதவுகளைத் தாண்டி தாம் வாழும் நிலத்தின் கலாச்சாரத்தையும் சமன்செய்ய முடியாமல் இரண்டுக்கும் நடுவில் நசுங்கியபடியிருக்கிறது புலம்பெயர் தமிழர்களின் அடுத்த தலைமுறை. அவ்வகையான தன் நிகழ்காலத்தை சொற்கள் கொண்டு கடக்க முயற்சிக்கும் அக்காலத்தின் மீது கேள்வியெழுப்பும் பெண்மனத்தின் அகப்பாடல்களே மயூ மனோவின் கவிதைகள்.
Be the first to rate this book.