நான், என்னுடைய குடும்பம், என்னுடைய நலம் என்கிற சுயநலக் கூண்டிலிருந்து மனிதர்களை விடுவித்து விசாலமான பார்வையுடன் உலகளாவிய நோக்குடனும் ஒட்டுமொத்த மனித குலத்தின் நலனுக்காக ஓயாமல் ஒழியாமல் பாடுபடுபவர்கள்தாம் முஸ்லிம்கள்.
ஆனால், இன்றைய முஸ்லிம் சமுதாயத்தில் தாம் இலட்சியக் குழுவினராக இருக்கின்றோம் என்கிற பார்வை மங்கிவிட்டிருக்கின்றது என்பதுதான் யதார்த்தம்.
இந்த நிலையில் முஸ்லிம் சமுதாயத்தைச் சிலிர்த்தெழச் செய்கின்ற வகையில் அவர்களுக்கு அவர்கள் மறந்து விட்டிருக்கின்ற பாடத்தை நினைவூட்டுகின்ற வகையில் எழுதப்பட்ட சின்னச் சின்ன கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல்.
சமுதாயத்தின் இன்றைய நிலைமையை மௌனமாக உணர்த்துகின்ற அதே வேளையில் மாற்றத்தின் பக்கம் செல்கின்ற பாதையையும் அழுத்தமாக பதிய வைப்பது இந்த நூலின் சிறப்பு.
Be the first to rate this book.