நாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாளம் என்ற கட்டுப்பாட்டின் சுமை மட்டும் இல்லாமலிருந்தால் நாம் எவ்வளவு மகிழ்ச்சியாகவும், நமது மனதுக்கு உண்மையாக இருப்பதன் சுதந்திரத்துடனும் இருக்க முடியும் என்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள்...
...ஆனால் மிகமிக முக்கியமானது நம்முடைய அணுகுமுறையில், நம் மன அமைப்பில் மாற்றம் உருவாக்க வேண்டும்...
குழந்தைகளை வளர்க்கும்போது பாலின அடையாளத்தை விட திறன்களுக்கு ஏன் நாம் முக்கியத்துவம் தரக்கூடாது ? பால் வேறுபாட்டைக் கடந்து, விருப்பத்திற்கு ஏன் நாம் முதலிடம் தரக்கூடாது?
...பாலரசியல் பற்றிய உரையாடல் அவ்வளவு எளிதானதாக இருப்பதில்லை. அது மனிதர்களைச் சங்கடப்படுத்துகிறது. சில சமயங்களில் எரிச்சல் ஊட்டுகிறது. பாலரசியல் பற்றிப் பேசுவதில் ஆண்கள் பெண்கள் இருபாலினத்திற்கும் மனத்தடை உள்ளது. தங்களின் சமூக இடத்தை மாற்றியமைத்துக் கொள்வது பற்றி சிந்தித்துப் பார்ப்பதுகூட மனக்கலக்கத்தைத் தருவதாக உள்ளதுதான் இதற்குக் காரணம்.
...பல ஆண்டுகளுக்கு முன் அகராதியில் அந்தச் சொல்லுக்கு அர்த்தம் தேடியபோது இப்படி இருந்தது:
'சமூக அரசியல், பொருளாதாரத் தளங்களில் பாலினங்களுக்கிடையில் சமத்துவம் வேண்டும் என்று நம்பும் ஒருவர் பெண்ணியவாதி'...
Be the first to rate this book.