நான்மணி மாலை - இது தமிழில் வழங்கும் தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்று. முத்து, பவளம், மரகதம், மாணிக்கம் என்னும் நால்வகை மணிகளை முறையே கோக்கப்பட்ட மாலை போல வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரிய விருத்தம், ஆசிரியப்பா என்னும் நால்வகைப் பாக்களை அந்தாதித் தொடையால் அமைக்கப்பட்ட நாற்பது செய்யுள்களைக் கொண்டதொரு நூல். இந்த நூலில், திருஞானசம்பந்தர் பத்து வெண்பாக்களாலும், திருநாவுக்கரசர் பத்து கட்டளைக் கலித்துறைகளாலும், சுந்தரர் பத்து ஆசிரிய விருத்தங்களாலும், மாணிக்கவாசகர் பத்து ஆசிரியப் பாக்களாலும் புகழ்ந்து பாராட்டப்பட்டுள்ளனர்.
Be the first to rate this book.