கணிப்பொறியில் வேகமாகச் செல்லுகின்ற இந்த உலகத்தில் நாலாயிரத் திவ்வியபிரபந்தத்தையோ, நித்யாநுஸந்தாநத்தையோ உள்ளத்தில் ஆர்வம் இருந்தும், பல அவசரப் பணிகளின் காரணமாகப் பலருக்கும் நாள்தோறும் ஸேவிக்க முடிவதில்லை. அத்தகைய ஆர்வம்கொண்ட ஆர்வலர்களுக்காகவே மறைந்த என்னுடைய இனிய நண்பர் 'மாருதிதாசன்' என்ற புனைபெயரைக் கொண்ட சீதாராமன் அவர்கள் "நாளும் ஒரு நாலாயிரம்" என்ற தலைப்பில், நாள்தோறும் ஒரு பாசுரமும், அதற்குரிய எளிய இனிய தெளிவுரையும் படித்தறியும் படியாக 365 பாசுரங்களைக் கொண்டு ஓர் உயர்ந்த பாராயண நூலைத் தொகுத்துள்ளார். முமுட்சுப்படி, விஷ்ணு சகஸ்ர நாமம், இராமானுஜர் வாழ்வும் வாக்கும், அனுமன் கதை போன்ற உயர்ந்த ஆன்மிக நூல்களை இயற்றிய அந்த வைணவப் பெருந்தகை, பக்திச்சுவை நனி சொட்டச்சொட்டப் பாடியுள்ள 365 நாலாயிரத் திவ்வியப் பிரபந்த பாசுரங்களைக்கொண்டு தொகுத்து ஓர் ஆண்டிற்கென அவர் இந்நூலை வழஙகியிருப்பது பெரும் பயனுடைய செயலாகும்.
Be the first to rate this book.