டாக்டர் யூஸுஃப் அல்-கர்ளாவி இஸ்லாமிய உலகின் சட்ட வல்லுனர்களில் ஒருவர். தன் வாழ்வின் மிக ஆரம்ப காலத்திலிருந்தே இஸ்லாமிய எழுச்சிக்காகப் பாடுபடும் பிரச்சாரகர். நவீன இஸ்லாமிய சிந்தனைப் புனரமைப்பில் அவருக்கு மிகப் பெரியதொரு பங்குள்ளது என்பதை நவீன இஸ்லாமியச் சிந்தனையுள்ள யாரும் மறுக்கவியலாது. இந்நூல் டாக்டர் யூஸுஃப் அல்-கர்ளாவியின் இரண்டு கட்டுரைகளின் தமிழாக்கம். ‘நாளைய முஸ்லிம் பெண்’ என்னும் முதல் கட்டுரை ‘முஸ்லிமதுல் கதி’ என்னும் தலைப்பில் அவர் நிகழ்த்திய சொற்பொழிவின் தமிழாக்கம். இதனை மொழிபெயர்த்த எஸ்.ஹெச்.எம்.ஃபழீல் (நளீமி), இலங்கை ஜாமிஆ நளீமிய்யாவின் பேராசிரியர். மற்றொன்று, ‘பெண்களின் பாராளுமன்ற அங்கத்துவம்’. இக்கட்டுரை ‘அல்¬முஜ்தமஃ’ என்னும் புகழ்பெற்ற அரபு பத்திரிக்கையில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம். இக்கட்டுரையை எம்.ஏ.எம். மன்ஸூர் (நளீமி) மொழிபெயர்த்துள்ளார். முதல் கட்டுரை இலங்கையில் ‘நாளைய முஸ்லிம் பெண்’ என்னும் தலைப்பில் தனி நூலாகவும் மற்றொன்று ‘தஃவா பணியில் பெண்கள்’ என்னும் நூலின் ஒரு கட்டுரையாகவும் வெளிவந்து சிறப்பான வரவேற்பைப் பெற்றன.
Be the first to rate this book.