அடுத்த வல்லரசு, நாளைய சூப்பர் பவர் போன்ற கலர்ஃபுல் கற்பனைகளை சற்றே ஒதுக்கிவைத்துவிட்டு நேர்மையாக இந்தியாவை மதிப்பிடச் சொன்னால், சர்வதேச வரை படத்தில் இந்தியாவின் மதிப்பை அளவிடச் சொன்னால், தேச பக்தி கொண்ட ஒவ்வொருவருக்கும் அளவுகடந்த வேதனைதான் எஞ்சி நிற்கும். அது நியானமானதும்கூட. சுதந்தரம் பெற்று இத்தனை ஆண்டுகள் கழிந்தும் குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளையே நிறைவேற்ற முடியாத அளவுக்கு நம் அரசாங்கம் பலவீனமடைந்திருப்பது ஏன்? ஏன் நம்மால் ஒரு சிங்கப்பூராக, ஒரு சீனாவாக உருவாக முடியவில்லை? எங்கே தடுமாறுகிறோம்? மேலே செல்லமுடியாமல், முன்னேற விடாமல் நம்மை இழுத்துப்பிடிக்கும் நண்டுகள் எவை? இந்தக் கேள்விகள் நம் அன்றாட வாழ்வோடும் நம் கனவுகளோடும் நம் எதிர்காலத்தோடும் தொடர்பு கொண்டவை என்பதால், இவற்றை நாம் அறிந்து கொண்டே தீரவேண்டியுள்ளது. தெளிவான கொள்கையின்றி, நடைமுறை சாத்தியக்கூறுகளைப் பற்றி சிறிதும் கவலையின்றி, அனைத்து பொறுப்புகளையும் தன் தலையில் போட்டுக்கொண்டு, நிற்கவும் முடியாமல் நிமிரவும் முடியாமல் தள்ளாடும் அரசின் செயல்பாடுகளை நூலாசிரியர் கறாரான விமரிசனத்துக்கு உட்படுத்துகிறார். பிரச்னைகள், அவற்றின் வேர்கள், தீர்வுகள் என்று பகுதி பகுதியாக இன்றைய இந்தியாவை ஆராய்ந்து, ஒரு விரிவான மாற்று செயல்திட்டத்தை முன்வைக்கிறது இந்தப் புத்தகம். இந்தச் செயல்திட்டம் சாத்தியம்தானா என்னும் சந்தேகத்தை எழுப்பாமல், அது சாத்தியப்பட நம்மால் என்ன செய்யமுடியும் என்று பார்ப்பதுதான் இன்றைய தேவை.
Be the first to rate this book.