இந்நூல் செய்யப்பட்ட காலம் இன்னதெனத் தெளிவாய்ப் புலப்பட்டிலது. இது சங்கமருவிய நூலெனக் கூறுவது கொண்டு, இதன் காலத்தைக் கடைச்சங்க காலமாகிய இரண்டாம் நூற்றாண்டெனப் பொதுவாய்க் கூறுவதுண்டு. கடைச்சாங்க நூல்களெனத் தெளிவுறத் துணியப்பட்ட பத்துப்பாட்டு, எட்டுத்தொகைகளிற் பயின்ற வாராத சத்தம், சோதிடம் (52), அபராணம் (207), உபகாரம் அபகாரம் (69), தீர்த்தம் (75), கோத்திரம் (242) முதலிய சொற்கள் இந்நூலில் வந்திருத்தலாலும், வரலாற்று ஆராய்ச்சிக்கு உரியதெனக் கருதப்படும் முத்தரையர் (200,296) என்னும் சொல் ஈரிடத்தில் அமைந்திருத்தலாலும். இஃது ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்ததாயிருக்கலாமென ஆராய்ச்சி அறிஞர்கள் கருதுகின்றனர்.
Be the first to rate this book.