‘அச்சாபீஸ்காரர் வீடு’ என்றே அனைவராலும் சுட்டிக்காட்டப்படும் அளவிற்குப் புகழ் பெற்ற ஒரு வீடு சென்னை - இலிங்கிச்செட்டித் தெருவில் இருந்தது. கலாரத்நாகரம் என்னும் அச்சுக்கூடம் இவ்வீட்டிலிருந்து தொழிற்பட்டதே இதற்குக் காரணம். இந்தச் சிறப்புக்குச் சொந்தக்காரர் ஊ.புஷ்பரதசெட்டியார். 1892இல் அவர் வெளியிட்ட நாலடியார் தற்போது மீள்பதிப்பாக வெளிவருகிறது. பனுவலுடன் பதவுரை, தெளிவுரை, இலக்கணக் குறிப்பு - மேற்கோள்கள், ஆங்கில மொழிபெயர்ப்பு ஆகியவற்றைக் கொண்ட நம்பகமான பதிப்பு இது.
Be the first to rate this book.