அறிவியல், கலைகள், கைத்தொழில்கள் என்ற களத்தில் இந்து நாகரீகத்தின் பங்களிப்பு மிகவும் கத்துக்குட்டித்தனமானது. நெசவு,நூற்பு போன்ற சில துறைகளை விலக்கிப் பார்த்தால் மனிதன் மிருக வாழ்வுக்கு மேற்பட்டதென்று சொல்லும்படியான குறைந்த பட்ச வாழ்வை அமைத்துக் கொள்ள இயற்கைக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் அவனுக்குத் துணை செய்யக்கூடிய தொழில்நுட்ப சாதனம் எதையும் இந்து நாகரீகம் வகுத்திடவில்லை. அறிவியல் தொழில் நுட்ப சாதனங்களே இல்லாத நிலையும் கொட்டிக் குவிக்கப்படுகிற பிரம்மஞானக் குப்பையும் சேற்ந்து கொண்டதால் தான் காலந்தோறும் பஞ்சங்கள் இந்நாட்டை பாழாக்கிச் செல்கின்றன. உள்ளத்தை பீடிக்கும் அறியாமை, மூட நம்பிக்கை நோய்களும், உடலைப்பீடிக்கும் மலேரியா, பிளேக் நோய்களும் காலங்காலமாய் நாட்டின் மீது சவப்போர்வையாய்க் கவிந்துள்ளன.
Be the first to rate this book.