நாகம்மாள் என்னும் பாத்திரத்தை மையமாகக் கொண்ட இந்த நாவல், பெண்ணைச் சுயசிந்தனையும் செயல்பாடும் உடையவளாகப் படைத்த விதத்தில் முதன்மைத் தன்மை வாய்ந்தது. தமிழின் தொடக்க நாவல்கள் பெரும்பாலும் பெண்களையும் அவர்கள் பிரச்சினைகளையும் பற்றியவையே. ஆனால் அவற்றில் வரும் பெண்களுக்குச் சுயமுகம் எதுவுமில்லை. ஆண்கள் பரிதாபப்பட்டு வழங்கும் அடையாளங்களைத் தரித்தவர்களாகவே அவர்கள் உள்ளனர். நாகம்மாளை அந்த வரிசையில் சேர்க்க முடியாது. தன் சுதந்திரத்திற்காகவும் எதிர்காலத்திற்காகவும் தன் சக்திக்கு உட்பட்டுக் கலகத்தைத் தோற்றுவிக்கும் இயல்புடையவளாக நாகம்மாள் விளங்குகிறாள்.
- பெருமாள்முருகன்.
5 Must Read
நான் ஏன் தலைமுறை தலைமுறையாக ஐக்கியமாக வாழ்ந்தவர்களுக்கு கெட்டப்பெயர் உண்டுபண்ணப் பார்க்கிறேன்.பங்கு பிரிக்க வேணுமென்று பாழ்படுத்த ஆரம்பிக்கிறேன்.(நாகம்மாள்) இவ்வளவு நாளாக தாய்போன்று ஒற்றுமையாக்க் குடும்பத்தை நடத்தியவளா பிரிக்க முயல்கிறாள்?(சின்னப்பன்). வெங்கமேடு(ஊர்), சிவியார்பாளையம்(ஊர்), நாகம்மாள்(சின்னப்பன் அண்ணன் மனைவி), முத்தாயா(நாகம்மாள் மகள்),சின்னப்பன், ராமாயி(சின்னப்பன் மனைவி),கெட்டியப்பன்(வில்லன்). இந்த விவசாய(வேளாண்) கூட்டுக் குடும்பத்தை சொத்து எப்படி நாசம் செய்தது என்பதே இந்த நாவல். ஆர்.ஷண்முகசுந்தரம் - எழுத்துக்கள் அனைத்தும் வட்டார வழக்கத்தில்(நாம் பேசுவதை அப்படியே எழுதுவது) உள்ளவை.இதுவே சிறப்பான ஒன்று. நான் வியந்த எழுத்தாளர். கொங்கு நாட்டு வேளாண் குடும்பத்தை நம் கண்முன் நிறுத்திவிட்டார். நாகம்மாள் நாவலில் என்னை கவர்ந்து இழுத்தவை பல வசனங்கள் அதில் சில, இங்கே பதிவுசெய்கிறேன். காலம் மகத்தான மாறுதல்களைச் செய்துவிடுகிறது.இந்த கர்வம்,அதட்டல்,ஆங்காரம் எல்லாம் ஒரு நாள் மண்ணில் தலை சாய்ந்துவிடும்.ஒளியின் வேகத்திற்கும் ஒரு எல்லையுண்டு. ஆழ்த்து யோசிக்காமல் உணர்ச்சியின் வேகத்தில் ஒவ்வொரு சமயம் நிதானமின்றிச் சொல்லிவிடுகிறோம்.’காலம் கழிந்து விடும்,வார்த்தை நிற்கும்.’ நேர்கோடு கிழித்தைப் போல கலப்பை பூமியை பிளந்து கொண்டு தெற்கே போகும். சிறுவித்து எப்படி பிஞ்சும்,பூவும் குலுங்கும் விருஷமாகி அதன் நிழலிலே எத்தனையோ ஜீவராசிகளுக்குக் குளிர்ந்த நிழலைத் தருகிறதோ, அந்தி வானத்தைக் கிழித்துக்கொண்டு செல்லும் சூரியனைப் போலக் கலப்பையும் பூமியைக் கிழித்துக்கொண்டு சென்றது. வாழைக் குருத்துபோலத் தளதளவென்றிருக்கும் அவளுடைய தேகம் கருப்பாகி விடுமோ என்று அவன் சஞ்சலப்பட்டான் போலும்! ஒரு விஷயம் நல்லதோ கெட்டதோ, அவசியமோ, அனாவசியமோ,ஆக்க்கூடியதோ ஆக முயாத்தோ, என்ன சங்கதியானாலும் அதை வளர்த்துக்கொண்டே பொழுதை களிப்பதில்தான் சிலருக்கு பிரியம். “மவராசன் எது சொன்னாலும் ரண்டு கண்ணுக்கு மூக்கு வெச்சது போலத்தான்”. “சின்னய்யா, என் கிலுகிலுப்பையைப் பாத்தாயா?” என்று ஆனந்தப் பெருக்குடன் ஓடிவந்து அவன் மடிமீது விழுந்தாள். “யாராச்சும் தலையில் மண்ணைப் போட்டுகொண்டா விளையாடுவாங்க?” “எல்லாம் மண்ணை அள்ளிப் போட்டுக்கரப்போ, நான் போட்டுக்காமே எப்படியிருக்கிறது சித்தப்பா?” ஒரு காடு,தோட்டம், பருத்தி பம்பலுக்கு போய் நாலோட ஒன்றாய்த் திரிந்து, வேலை வெட்டியிலே கெட்டிக்காரியாயிருந்தால்தான் கட்டினவனுக்கும் சந்தோசமாயிருக்கும்.புகுந்த இடத்திலும் போற்றுவார்கள். “உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூட முடியுமா?” அவர்கள் புடவைத் தலைப்பை எடுத்து இடுப்பைச்சுற்றி மடி கூட்டியிருந்தார்கள்.கரண்டைக் காலுக்குமேல் தூக்கி,கொசுவம் வைத்திருந்த கொரநாட்டு சேலையுடன் நடு நெற்றி வாகு எடுத்து சிலர் கொண்டை போட்டிருந்தார்கள்.இன்னும் சிலர் ஈரக்கூந்தலை உலர்த்துவதற்க்காக கோடாலி முடிச்சுப் போட்டிருந்தார்கள்.அவர்களது மினுமினிப்பான உடம்பையும்,கரங்களின் உறுதியையும் பார்க்க பார்க்க இன்னும் பார்த்துக்கொண்டே இருக்கலாமெனத் தோன்றும்.இளமை பூத்து நிற்கும் அங்க வனப்பை, அள்ளி எறிவதைப்போல,சும்மா ஒரு குலுங்குக் குலுங்கி குனிந்து பருத்து எடுக்கும்போதும்,நிமிர்ந்து கம்பீரமாக ஒருவரையொருவர் பார்க்கும்போதும்,கலகலவென்று அவர்கள் பேசும்போதும்,சிரிக்கும்போதும்,திரும்பும்போதும்,கால் மிஞ்சிகள் ஒலிக்க நடக்கும்போதும்,செடிகளை ஒதுக்கிவிட்டு அவர்கள் முன்னோக்கி செல்லும்போதும், அவர்களின் ஒவ்வொரு அசைவிலும் மனதை மகிழ்விக்கும் மாயம் ததும்பி நின்றது! மணியக்கார கருப்ப கவுண்டர் நல்ல பாராசாரியான ஆள். கருவேலங்கட்டை மாதிரி அவரது காலும் கையும் உறுதியாயிருக்கும்.அவரது நிறமும் கருஞ்சாந்து போலத்தான்.கிருதா மீசைக்கும், அவரது மேனிக்கும் வித்தியாசமே தெரியாது.அவரது முறுக்கு மீசையில் எலுமிச்சங் கனியை நிறுத்தலாம்! என்ன! நிறுத்திய காண்பித்திருக்கிறார்!அவருடைய மார்பு கடப்பைக்கல் போன்றிருந்தது.இன்னும் மற்ற அவயங்களும் கச்சிதமாக அமைந்திருந்தன.அவர் ஏதாவது தேகப்பயிற்சி செய்கிறாரா இல்லையா என்பது நமக்கு தெரியாது.இந்த தேக கட்டு இவர்கள் வம்சத்திற்குப் பரம்பரைச் சொத்து. கிழவர், தன் காலத்தில் அமர்க்களமான ஆட்டபாட்டத்துடன் வாழ்ந்தவர்தான். இன்று எல்லாம் அடங்கி, ஒடுங்கி உட்கார்ந்துவிட்டார். “கேளடா ராஜா, மலைபோல மண்டிக்கிடந்த கள்ளிகளெல்லாம் மாயமாய் மறஞ்சது பாத்தாயா? நாம் எத்தனை நாள் கத்தியிலும் அரிவாளிலும் வெட்டித் தள்ளியும் வெட்ட வெட்ட கொழுத்தது! எப்படி பூண்டற்றுப் போச்சுது பாத்தாயா? கள்ளியை நாசம் பண்ணின வெள்ளை பூச்சியையும் பாத்திருப்பாய். அது கடுகிலும் சின்னஞ்சிறு சாத்தானே இருந்தது. நம்முடைய கத்தியும்,கவையும் முடிக்க முடியாத வேலையை வெகு சுளுவில் அப்பூச்சி முடித்துவிட்டது. இண்னைக்கு ஒரு ஆனையைக்கூட தூக்கியடிக்கலாமென்று உனக்கு தோணுது. மீசையை முறுக்கி விடறாய்! கையைக் காலைத் தட்டறாய்; வாய்ப் பேச்சு வாயிலிருக்க, கைவைக்க ஆரம்பிக்கிறாய். ஆனா இந்த நல்ல ரத்தம் நொடியிலே மறைஞ்சிடும்ப்பா ஒரு பூச்சி வேண்டாம், புழு வேண்டாம், சும்மா இருக்க இருக்க மாயமாய்ப் போயிடும்.” (கண்ணான என் பிறப்பைக் காணுவது எக்காலம்? பொன்னான என் பிறப்பைப் போய்ப் பார்ப்ப தெக்காலம்?) “அக்கரமத்திற்கு தாம் போகவேண்டாம்.ஆனா வந்தாலும் விடவேண்டாம்.” திருமனை செய்யத் தெரியாதவன் தேர் வேலைக்கு அச்சாரம் வாங்கினானாம்.ஒரு காணி நிலத்தை கிளறி பாங்காகப் பிழைக்கத் தெரியாத இந்த கெட்டியப்பானா உனக்கு பங்கு வாங்கிக் கொடுக்கிறவன்! ‘கலைப்பார் கலைத்தால் கல்லும் கரையும்’ சாமி மாடுபோல அவன் வஞ்சகமின்றி வளர்ந்திருந்தான். பனைமரத்து அடிக்கட்டைபோல இருக்கும் அவன் தேகம். ஊரார் சொத்தை தின்றே சேகேறியிருந்தது. சித்திரை வெயிலில் சோரும் வாழைக் குருத்தைப் போல அவன் அங்கங்கள் சுருங்கின. - கலைச்செல்வன் செல்வராஜ்.
Kalaiselvan Selvaraj 28-02-2018 10:19 pm