புத்தாயிரத்தில் தமிழுக்கு அறிமுகமான நவீன கவிஞர்களில் முக்கியமானவர் ராணிதிலக். அவரது முதல் கவிதைத் தொகுப்பு இந்நூல். நவீன தமிழ் கவிதைப் பரப்பில் இத்தொகுப்பு பெரும் தாக்கத்தை அப்போது ஏற்படுத்தியது. அதன் புத்தம் புதிய கையடக்கப் பதிப்பு இது.
மேற்கில் வீழ்கிறது ஒற்றைச் சக்கரம்
நிலாவில் மறைகிறது சாயுங்காலம்
அமைதி பூண்ட
ஆலமரம் அணிகிறது நிசாநிதி வர்ணம்
சில்வண்டுகள் ரீங்கரிக்க
திதி நாளில்
தரிசான இருள் வயலில்
அலைகிறது ஒற்றை நட்சத்திரம்
முகர
அவ்வேளை
துயர் பெருக்கும் கண்ணில்
வழிகிறது ஒரு துளி இரவு
மின்மினிகள்
உண்ண
Be the first to rate this book.