வைகைப்புனல் பெயர்ந்து மாறிய மணல்தடத்தில் கைவரக் கிட்டிய அது, ‘சுருளியருவும் மேன்மலையினது ஆகலாம். ஒரு கூழாங்கல். இரத்தினம் எனக் கையிருப்புக்கண்டு இருந்தது, தானே அது நழுவுகிறவரை.
பாறையன்று, கூழாங்கல்லே பண்பாட்டின் குறியீடு. என்றால், நாடோடித் திரிந்து கரடுமுரடு மழுங்கிய ஓர் ஆள்?
பிறகும், கல் என்றில்லை, புனல்கூட கடல்சேர்தல் உறுதியில்லை. ஒட்ட ஒழுகலின் கட்டாயம் அப்படி.
இப்படி, நழுவியபாடும் தரையுருளும் பயணத்தால் மெய்ப்பட நேருமொரு மழுக்கத்தை மிளிர்க்கிறது இந்நூல். புறக்கற்புப் போற்றாத பொறுக்கி நிகழ்தகவால், புதுமொழி யொரு தமிழ்நடையால், மரபு எனப்படுவது ‘வேர்’அன்று, ‘விழுது’என்று ஒளிர்க்கிறது.
Be the first to rate this book.