இந்த சாதாரண மக்கள் குறித்து இதுவரை யாருமே கவலைப்படவில்லையே என்பதுதான் எழுத்தாளரின் ஏக்கம். “குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து நாடாளுமன்றம், சட்டமன்றம், ஊடகங்கள், பொதுத்தளங்கள் எல்லாவற்றிலும் விவாதங்கள் நடந்தன. ஆனால் எங்குமே தாயகம் திரும்பியவர்களை, அவர்களில் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டிருப்பவர்களைக் கணக்கில் கொண்டு எதுவும் நடத்தப்படவில்லை என்பதுதான் ஆசிரியரின் ஆதங்கம். மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள், தமிழக அரசு என யாரும் இவர்களைக் குறித்து கவலைப்படவில்லையே, ஏன் நாங்கள் ஆதரவற்றவர்களா? அநாதைகளா?” என்று கேட்பதோடு, இந்தியாவிலிருந்து – தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட மக்களின் வரலாறுகளையும் விபரத்தையும் ஆதாரத்தோடு ஆவணப் படுத்தியிருக்கிறார் ஆசிரியர்.
Be the first to rate this book.