வசனகவிதை, புதுக்கவிதை வரலாற்றில் பாரதிக்கு அடுத்த முன்னோடி, 'மணிக்கொடி'யின் முக்கியமான மூத்த எழுத்தாளர்களுள் ஒருவர், தமிழ் இலக்கியப் பரப்பின் குறிப்பிடத்தக்க ஆளுமையாகத் திகழ்கவர் ந.பிச்சமூர்த்தி.
அவருடைய சிறுத்தைப் படைப்புலகத்தையும், கவிதையுலகத்தையும் ஏற்கெனவே அறிந்துள்ள தமிழிலக்கிய உலகம் இத்தொகுதியால் அவருடைய கட்டுரை உலகத்தை உலகம் முதன்முறையாகக் கண்ணுறும் வாய்ப்பைப் பெறுகின்றது.
இதுவரை விரிவாக அறியப்படாத ந.பிச்சமூர்த்தியின் இன்னொரு பரிமாணத்தை இந்நூல் தமிழகத்தின் கவனத்திற்கு உரித்தாக்குகின்றது.
காலங்களைத் தாண்டிய நிலைபேறு கொண்டதாக அவரது கட்டுரை உலகம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ந.பி.யின் பரந்நு விரிந்த இலக்கியப் பயிற்சியையும், பார்வைகளையும், இலக்கியக் கோட்பாடுகளையும், சமகால மறுமலர்ச்சி இலக்கிய வரலாற்றையும் இத்தொகுதியின் கட்டுரைகள் நமக்கு உணர்த்துகின்றன.
Be the first to rate this book.