நவம்பர் 1936 முதல் டிசம்பர் 1984 வரையில், ‘மணிக்கொடி’ முதல் ‘எழுச்சி’வரையில் எம்.வி. வெங்கட்ராம் எழுதிய நூற்று ஆறு சிறுகதைகளின் காலவரிசைத் தொகுப்பாக இந்நூல் வெளிவருகிறது. பல்வேறு பழைய பத்திரிகைகளிலிருந்து புதிதாகக் கண்டறியப்பட்ட எம்.வி.வி.யின் முப்பத்து மூன்று சிறுகதைகள், இப்போதுதான் முதல்முறையாக இத்தொகுப்பில் பிரசுரம்பெறுகின்றன.
எண்ண வெள்ளமாய்ப் பொங்கும் இயல்புணர்வுகளின் பெருங்காடே, இம்முழுத் தொகுப்பு. லௌகீகத்தின் இரைச்சலும் தத்துவத்தின் அமைதியும் பளிச்சிடும் உணர்வோடைக் கதைஞராகவும், ‘பரிசோதனை எழுத்தாளராகவும்’ எம்.வி.வி. அடைந்த கலை வெற்றியின் படைப்பாவணமாகிறது இந்நூல்.
Be the first to rate this book.