நிதி நிர்வாகத்தில் பெரும்பாலான மக்களை ஈர்ப்பது ‘Mutual fund’ எனப்படும் ‘பரஸ்பர நிதி. மியூச்சுவல் ஃபண்ட் குறித்த விளம்பரங்களின் இறுதியில் ஒரு வாக்கியம் வரும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, முதலீடு செய்வதற்குமுன் திட்டம் சார்ந்த ஆவணங்களைக் கவனமாகப் படிக்கவும்.’
இந்த எச்சரிக்கை வாசகத்தைக் கேட்டவுடன் முதலீடு செய்யும் ஆர்வம் இருந்தாலும் ‘எதற்கு ரிஸ்க்’என்று இந்தத் திட்டம் குறித்து மேலும் அறிந்துகொள்வதைத் தவிர்த்துவிடுகிறோம். அவர்களுக்கு உதவுவதற்காகவே எளிமையான முறையிலும் தெளிவான விளக்கங்களுடனும் உதாரணங்களோடும் தற்காலச் சந்தைச் சூழலுக்கு ஏற்றபடி இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
மியூச்சுவல் ஃபண்ட் குறித்த அடிப்படை அறிமுகம், பலவகைப்பட்ட ஃபண்டுகள், அதில் முதலீடு செய்வதற்கான வழிமுறைகள், அதன் சட்ட-திட்டங்கள், கவனம் கொள்ளவேண்டிய இடங்கள், லாபம் ஈட்டுவதற்கான வழிகள், அபாயங்கள் மற்றும் எச்சரிக்கைகள் என மியூச்சுவல் ஃபண்ட் குறித்த அத்தனை சந்தேகங்களையும் தீர்த்து ஒரு தெளிவான வரைபடத்தை உங்கள் கையில் கொண்டு சேர்க்கிறது இந்தப் புத்தகம்.
Be the first to rate this book.