எம். ஏ. நுஃமானின் அக்கறைகளையும் அவதானிப்புகளையும் தரிசனங்களையும் காட்டுகிறது இந்நேர்காணல் தொகுப்பு. மார்க்சியம், மொழியியல், சமூகம், இலக்கியம், இனத்துவம், தேசியவாதம் என இதன் பரப்பு விரிவானது. இந்த விரிந்த பரப்பு இலங்கை அரசியலின் ஒரு காலகட்டத்தை மறுவாசிப்புக்கு உள்ளாக்குகிறது. கூடவே இலக்கியமும் சமூகமும் ஒன்றிணைகிற புள்ளிகளையும் சுட்டிக்காட்டுகிறது. இலக்கியவாதியாகவும் மொழியியலாளராகவும் விமர்சகராகவும் சமூக அக்கறை கொண்டவராகவும் நுஃமான் என்கிற ஆளுமையின் உருவாக்கத்தை விளங்கிக்கொள்வதற்கான திறப்புகளை இந்நேர்காணல் சித்திரங்கள் அளிக்கின்றன. 14 நேர்காணல்களைக்கொண்ட இத்தொகுப்பிலிருந்து தமிழின் பல்துறை ஆளுமை ஒருவரின் விரிந்த வரைபடத்தைக் கண்டடைய முடியும்.
Be the first to rate this book.