பிரதாப முதலியார் சரித்திரம் (1879) என்ற முதல் தமிழ் நாவலுக்குப் பிறகு, விவேகசிந்தாமணி மாசிகையில் தொடராக ஆறு அத்தியாயங்களே வெளியான நிலையில் பாதியில் நிறுத்தப்பட்டது மாதவையா எழுதிய சாவித்திரி சரித்திரம் (1892) என்ற சமூக நாவல். பிராமண சமுதாயத்தின் பெண்கள் நிலை பற்றிய விமர்சனக் குரல் இந்த நாவல் என்பதே இதற்குக் காரணம். பத்திரிகையில் வெளிவந்த முதல் தொடர்கதையாகவும் இரண்டாவது தமிழ் நாவலாகவும் முதல் சமூக நாவலாகவும் கருதத்தக்கது இந்த சாவித்திரி சரித்திரம். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, இதே நாவல் மிகச் சில திருத்தங்களுடன் முத்துமீனாட்சி (1903) என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டது.
இந்தப் பதிப்பில் தேடிக் கண்டடைந்த சாவித்திரி சரித்திரத்தின் ஆறு அத்தியாயங்களுடன் முதல்முறையாக முத்துமீனாட்சி நாவல் முழுமையாக வெளியிடப் பெறுகிறது.
Be the first to rate this book.