இருபெரும் இமாம்களான முஹம்மது பின் இஸ்மாயீல் அல்புகாரீ, முஸ்லிம் பின் ஹஜ்ஜாஜ் (ரஹ்மத்துல்லாஹி அலைஹிமா) ஆகியோர் செவ்வனே தொகுத்தளித்த ஸஹீஹுல் புகாரீ ஸஹீஹ் முஸ்லிம் ஆகிய இரண்டு நூல்களும் உலக முஸ்லிம்கள் மத்தியில் பெயர் பெற்றவையாகும். இவ்விரண்டு நூல்களுள் தொகுக்கப்பெற்றுள்ள நபிகளாரின் பொன்மொழிகள் யாவும் முற்றிலும் சரியானவை என்பதில் யாருக்கும் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. அத்தகைய சிறப்பையும் நம்பகத் தன்மையையும் ஒருங்கே பெற்ற இவ்விரண்டு தொகுப்பினுள் புகாரீ, முஸ்லிம் ஆகியோர் இணைந்து ஒருசேரத் தொகுத்துள்ள ஒரே கருத்துடைய பொன்மொழிகளை மட்டும் தேடிக் கண்டுபிடித்து கோர்வை செய்துள்ளார். முஹம்மது ஃபுஆத் அப்துல் பாக்கீ (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள். இவருடைய இச்சீரிய முயற்சிக்குரிய நற்கூலியை நல்லான் அல்லாஹ் நிறைவாக வழங்குவானாக!
Be the first to rate this book.