சேர, சோழ, பாண்டிய மன்னர்களைப் பற்றிய அழகிய பாடல்களைக் கொண்ட பழந்தமிழ் நூல் முத்தொள்ளாயிரம். அன்றைய தமிழகத்தின் வளம், பண்புகள், பழக்க வழக்கங்கள், வீரம், காதல் எனப் பலவற்றையும் சிறு காட்சிகளாக முன்வைக்கும் எழிலான பாடல்களின் தொகுப்பு இது.
முத்தொள்ளாயிரத்தை எழுதிய புலவருடைய பெயர் நமக்குத் தெரியவில்லை. அதில் எத்தனைப் பாடல்கள் இருந்தன என்பதில்கூடக் குழப்பம் இருக்கிறது. எனினும், நமக்குக் கிடைத்திருக்கும் நூற்றுச் சொச்சப் பாடல்களைப் படிக்கும்போது இந்நூலின் முழுமையை மனக்கண்ணில் பார்த்து மகிழ இயலுகிறது.
இந்நூல் முத்தொள்ளாயிரப் பாடல்களை எளிய தமிழில், எல்லாருக்கும் புரியும்படி அறிமுகப்படுத்துகிறது.
Be the first to rate this book.