முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களைப் பற்றி பாடிய கவியரங்கக் கவிதைகளின் தொகுதிதான் “முத்தமிழின் முகவரி”. இந்நூலில் கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிய முன்னுரையில் இவ்வாறு கூறுகிறார்.
கலைஞர் தலைமை ஏற்றிருந்த கவியரங்கங்ளிலும் அவருடைய பிறந்த நாள் கவியரங்கங்களிலும் நான் அவரைப் பற்றிப் பாடிய கவிதைகளையும்¸ ‘முரசொலி’ சிறப்பு மலர்களில் வெளிவந்த என் கவிதைகளையும் இந்த நூலில் தொகுத்துத் தந்திருக்கிறேன்.
இந்தக் கவிதைகள் அரியாசனஅரசனுக்கு நான் விசிறிய சாமரைகள் அல்ல் என் இதயத்தில் இயற்கையாகப் பூத்த தாமரைகள்.
கலைஞர் கோட்டையில் கொலுவீற்றிருக்கும் போது நான் அவரைப் போய் பார்த்ததில்லை. ஆனால் அவர் வீட்டுப் பக்கம் போனாலே ஆபத்து என்று எல்லோரும் அஞ்சிய நேரத்தில் நான் அவரைச் சிறையில் சென்று சந்தித்திருக்கிறேன்.
இவை பரிசிலுக்காகப் பாடிய பாடல்கள் அல்ல் பரிசாகப் பாடிய பாடல்கள்.
என் கவிதை என்றுமே பிச்சைப் பாத்திரமாக இருந்ததில்லை.
வெற்றி பல கண்டு நான்
விருது பெற வரும்போது
வெகுமானம் என்ன
வேண்டும் எனக் கேட்டால்
அப்துல்
ரகுமானைத் தருக என்பேன்
என்று என்னையே வெகுமானமாகக் கேட்டவர் கலைஞர்.
இந்த நூல் அவருடைய ‘வெகுமான’த்தின் வெகுமானம்.
இது ஒரு புதியபுறநானூறு. இதில் தமிழினத்திற்காகப் போராடிய ஒரு மாவீரனின் வீரம் மட்டுமல்ல¸ தமிழக வரலாற்றின் சாரமும் இருக்கிறது.
Author
கவிக்கோ அப்துல் ரகுமான்
Be the first to rate this book.