ஒருவரை அவரின் சம்பளம் கோட்டீஸ்வராக மாற்றாது. அவரின் சேமிப்பு மற்றும் முதலீடுதான் கோடீஸ்வரர் ஆக மாற்றும். மாதம் ரூ.1,000 வீதம் 30 ஆண்டுகளுக்கு தொடர்ந்து முதலீடு செய்து வந்தால் நீங்களும் கோடீஸ்வராகக் கூடும் என்பது இந்த நூலில் எளிமையாக விளக்கப்பட்டிருக்கிறது. இந்த நூலில் சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் உள்ள வேறுபாடு தொடங்கி 108 முக்கிய முதலீட்டு மந்திரங்களை விவரிக்கிறது.
துறை சார்ந்த நிபுணர்களின் உதவியோடு தொகுத்து வழங்கி இருக்கிறார் நூலாசிரியர் சி.சரவணன். முதல் செலவு - முதலீடு, முதலீட்டுக்கான சரியான ஃபார்முலா; வருமானம் - சேமிப்பு = செலவு, ஜீரோ ரிஸ்க் - ஜீரோ வருமானம், உங்கள் பணம் உங்களுக்காக உழைக்க வேண்டும், போன்ற முதலீட்டு மந்திரங்கள் சிந்திக்க தூண்டுபவையாக இருக்கின்றன. வங்கி ஃபிக்ஸடு டெபாசிட், இன்ஷுரன்ஸ், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்டு, ரியல் எஸ்டேட், தங்கம் என எந்த முதலீடாக இருந்தாலும் அதனை மேற்கொள்ளும் முன் இந்தப் புத்தகத்தை ஒருமுறை படித்துவிட்டு செய்தால் நிச்சயம் லாபகரமாக இருக்கும், அந்த அளவுக்கு விஷயங்கள் இதில் பரந்து விரிந்திருக்கின்றன. இந்த முதலீட்டு மந்திரங்கள் உங்களை செல்வந்தராக்கும் என்பதில் சந்தேகமில்லை! மந்திரங்களை உச்சரிக்க உள்ளே செல்லுங்கள்!
Be the first to rate this book.