‘அன்தில்லா’ என்பது இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான வளமனையாகும். இதுவரையில் இவ்வளவு பெருந் தொகையைச் செலவிட்டு வேறு எவரும் இதுபோன்ற வீட்டைக் கட்டவில்லை. 27 அடுக்கு மாடிகள் கொண்ட இம்மாளிகையில், மூன்று சிறிய விமானதளங்கள், ஒன்பது மின் தூக்கிகள், தொங்குத் தோட்டங்கள், நடன அரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், ஆறு தளங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகள் முதலானவை உள்ளன. 600 வேலைக்காரர்கள் இருக்கின்றனர். 27 அடுக்குகளின் உயரத்திற்கும் இரும்புச் சட்டகங்கள் மீது புல்வெளி அமைக்கப் பட்டுள்ளது.
120 கோடி மக்கள் வாழும் இந்தியாவில், நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 25 விழுக்காடு மதிப்பு அளவிற்கான சொத்து இப்படி 100 பெரும் கோடீசு வரர்களிடம் இருக்கிறது. இவ்வளவு பெரிய மாளிகையில் அம்பானி குடும்பம் வாழவில்லை. இதற்கான காரணம் என்ன என்பது எவர்க்கும் உறுதியாகத் தெரியவில்லை. ஆயினும் அந்த மாளிகைக்கு வாஸ்து சரியில்லை; அதில் பேய்கள் நடமாடுகின்றன; அது ‘அதிர்ஷ்டம்’ இல்லாதது என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.
-நூலிலிருந்து
Be the first to rate this book.