காதலிலிருந்து வரும் ஊற்றுகள் கவிதைகளை, நல்ல படைப்புகளை பெருவெள்ளமாக வழங்கவும் செய்கின்றன. அவற்றில் சில முடியும்போது தாங்கவியலாத துன்பங்களையும் தந்துவிடுகின்றன. இதில், சரி, தவறுகளைத் தாண்டி காதல் என்ற ஒற்றைச் சொல் முன் தன் நியாயத் தராசுகளை நிறுத்திக்கொள்கிறது. எதுவாகிலும் இந்நாவலில் இவான் துர்கேனிவ் வரிகளில் சொல்வதானால், ‘இதுதான் காதல், இதுதான் மோகம், இதுதான் சமர்ப்பணம்’ என்று எண்ணிக் கொண்டேன். தங்களையே பலி கொடுப்பது சிலருக்கு இனிக்கிறது. ஆம் முதல் காதலின் பலிபீடத்தில் தலை சாய்த்து நினைவுகளை அசைபோடுவதும் இனிமையானதுதான்.
* இவான் துர்கேனிவ்
Be the first to rate this book.