தனிமனித உறவுநிலைகளில் உண்டாகும் முரண்கள் மற்றும் பிறழ்வுகளைப் பேசும் கவிதைகளில் உணர்ச்சியின் தழுதழுப்பு வெளிப்படையாகவும், எளிதில் தொற்றக் கூடியதாகவும் இருக்கும். அறிவார்த்தத்தின் பாதையில் தொடர்ந்து சென்று, மேற்செல்ல இடமின்றி முட்டி நிற்கும் கவிதைகள் உருவாக்கும் அனுபவமும் உணர்ச்சிபூர்வமானதுதான் ஆனால், ஏற்கனவே அறியபட்ட அர்த்தத்தில் அல்ல. தர்க்கத்தின் பாதையில் வளர்ந்து சென்று தர்க்க முறிவின் காரணமாக உருவாகும் கையறு நிலையைச் சந்திப்பதே என் பெரும்பாலான கவிதைகளின் முயற்சியாக இருந்திருக்கிறது என்று தோன்றுகிறது.
Be the first to rate this book.