இந்திய சமுதாயத்தின் ஒரு பிரிவினரான தமிழக முஸ்லிம்களின் வரலாறு தொன்மையானது. 7-ம் நூற்றாண்டின் இறுதியில் அரபு வணிகர்கள் நமது கீழைக் கடற்கரையின் பல பகுதிகளில் வந்து வாணிபம் செய்த்து முதல் இந்த வரலாறு தொடங்குகிறது.
வாணிகர்களுடன் வந்த சமயச் சான்றோர்களும், இறைநேசர்களும் தமிழக முஸ்லிம்களின் வரலாற்று நாயகர்களாக விளங்குகின்றனர். அவர்களது தன்னலமற்ற தொண்டும் தூய வாழ்வும் தமிழ் மண்ணில் இஸ்லாம் தழைத்து வளர உதவியது.
ஏராளமான இலக்கியச் சான்றுகள், ஆவணங்கள், கல்வெட்டு, செப்பேடு ஆகிய வரலாற்றுத் தடயங்கள் சேகரிக்கப்பட்டு இந்த நூல் வரையப்பட்டுள்ளது. 1988-ம் ஆண்டு இஸ்லாமிய கலை, பண்பாட்டு ஆய்வு மையம் சார்பில் நடத்தப்பட்ட போட்டியில்
சிறந்த நூல்களுக்கான போட்டியில் இந்த நூல் முதல் பரிசனை தட்டிச் சென்றது
Be the first to rate this book.