நதிகளை அதன் போக்கிலேயே ஓடவிட்டால் அதன் அழகே தனிதான். அல்லவா? வில்லைத் தயாரித்தவனிடமே கொடுத்து அதை பயன்படுத்திடச் சொன்னால் என்ன அருமையாக அதை அவன் பயன்படுத்துவான் அல்லவா? இதுபோல மனித குலத்தை வழி நடத்துவதற்காகவே படைக்கப்பட்ட முஸ்லிம் சமுதாயத்திடமே உலகத்தலைமை இருந்திருந்தால் மனித குலம் எல்லாமும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்திருக்கும். மனித குலத்தின் வரலாறு சோதனைகளாலும் வேதனைகளாலும் அதிர்ச்சிகளாலும் சூழப்பட்டு இருக்கிறதே இப்போது! இப்படியா இருந்திருக்கும் முஸ்லிம்கள் உலகத்தலைமை ஏற்றிருந்தால்?
இப்போது நாம் படித்துக் கொண்டிருக்கிறோமே அப்படி இருந்திருக்காது மனித வரலாறு. மனித வரலாறு அழகு மிளிரும் பேரும் புகழும் பெற்றுத் திகழும். எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்திருக்கும். அனைவரும் கண்ணும் கருத்தும் குளிர வாழ்ந்திருப்பார்கள். என்ன செய்ய? யாரைக் குறை சொல்ல முடியும்? விதி வேறுமாதிரியல்லவா? அமைந்துவிட்டது. ஆம் முஸ்லிம்களிடத்திலேயே வீழ்ச்சி ஏற்பட ஆரம்பித்தது...
நூலிலிருந்து...
Be the first to rate this book.