இளைஞர்கள் ஒரு மகன் என்ற முறையில், ஒரு மாணவர் என்ற முறையில், ஒரு கணவர் என்ற முறையில், ஒரு வணிகர் என்ற முறையில், ஒரு இளைஞர் என்ற முறையில் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் ஏராளமானவையாகும். அவை எவை என்பது பற்றியும், அவற்றை வெல்ல அவர்கள் புரிய வேண்டியவை எவை என்பது பற்றியும் அவர்கள் அறிந்திருத்தல் அவசியமாகும். இந்நூலில் நான் அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் எவை என்பதைக் கூறியிருக்கிறேன். அவற்றை வெல்ல வழி என்பதைக் குறிப்பிட்டிருக்கிறேன். மறுமையில் ஒருவரிடம் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று, “உன் இளமையை எப்படிக் கழித்தாய்?” என்பதாக இருக்கும். அதற்குக் காரணம் இளமைப் பருவம் தவறுகள் செய்யப்படுவதற்குத் தகுந்த பருவமாக இருப்பதுதான். எனவே நான் இந்நூலில் இளைஞர்கள் செய்யச் சாத்தியமான தவறுகளைச் சுட்டிக் காட்டியிருக்கின்றேன். இளைஞர்கள் புரிய வேண்டிய நன்மைகளைக் குறிப்பிட்டுக் கூறியிருக்கிறேன். இளைஞர்கள் தாங்கள் தள்ள வேண்டிய பழக்கங்கள் பற்றிக் கூறியிருக்கிறேன். இளைஞர்கள் கொள்ள வேண்டிய பழக்கங்கள் பற்றிச் சொல்லியிருக்கிறேன். இளைஞர்கள் நாடு, வீடு இரண்டிற்கும் அவசியமானவர்கள் ஆவர். நாடு தழைக்கவும், வீடு தழைக்கவும் அவர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் அநேகம் ஆகும். அப்பணிகளில் முதலாவது, முக்கியமானது அவர்களே ஓர் உத்தமமான இளைஞராக உருவாவதுதான். அப்படி உருவானால் அவர்கள் வீட்டிற்கு ஒரு நல்ல பிள்ளையைக் கொடுக்க முடியும், நாட்டிற்கு ஒரு நல்ல குடிமகனை வழங்க இயலும். இந்த வகையில் இந்நூல் சிறிதளவாவது உதவுமானால் நான் பெருமளவு மகிழ்கிறேன்” என்று இந்நூலின் ஆசிரியர் எம்.ஆர்.எம்.முஹம்மது முஸ்தபா அவர்கள் இந்நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.
Be the first to rate this book.