1975 ஆம் ஆண்டு அவசர நிலைக் காலத்தில் எழுதுவதற்கும்… பேசுவதற்கும்… பொது வெளியில் கூடுவதற்கும் அன்றைய ஒன்றிய அரசு விதித்திருந்த தடையை எதிர்த்து… செம்மலரில் எழுதிக் கொண்டிருந்த 32 எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இன்று 47 ஆண்டுகளைக் கடந்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமாக மாற்றம் பெற்று மாபெரும் மக்களியக்கமாக வளர்ந்து பயணிக்கிறது… இந்தத் தொகுப்பை பொறுத்தமட்டிலும் சில முன்னுபந்தனைகளை குழுவினர் சார்பில் உருவாக்கிக் கொண்டு, தமிழ் ரைட்டர்ஸ் இணையதளத்தில் வெளியான கட்டுரைகளில் தமுஎகச மாநிலக் குழுவில் முன்பும், தற்போதுமாக இடம் பெற்றுள்ள 54 படைப்பாளிகளை மட்டுமே அறிமுகப்படுத்தும் விதமாக முதல் தொகுப்பு வெளியாகிறது.
Be the first to rate this book.