“முறியடிப்பு” நாவலின் முக்கிய நோக்கங்கள் யாவை? அதனைக் கீழ்வருமாறு என்னால் விளக்க முடியும். முதலாவதும், முக்கியமானதுமான கருத்து: உள்நாட்டுப் போரின் போது மனித மூலக்கூற்றின் தேர்வு முறை. புரட்சிக்கு எதிரானதாக இருந்த ஒவ்வொன்றுமே, உண்மையான புரட்சிப் போராட்டத்திற்குப் பயனற்ற ஒவ்வொன்றும் அடித்துச் செல்லப்பட்டன. புரட்சி முகாமில் ஒவ்வொன்றுமே மாற்றம் பெற்றன. அதே வேளை ஒவ்வொன்றும் புரட்சியின் உண்மையான வேர்களினின்றும், லட்சோபக்கணக்கான மக்களிடமிருந்து தோன்றின. அது வலுவானதாகவும், வளர்ச்சி கொண்டதாகவும் மாறியது, சமூகம் மிகப் பெரும் புத்துருவாக்கம் பெற்றது.
மக்களுடைய இந்தப் புத்துருவாக்கமானது வெற்றிகரமாகச் சென்று கொண்டிருந்தது, ஏனெனில் புரட்சியானது உழைக்கின்ற மக்களது முற்போக்குப் பிரதிநிதிகளாலும், இந்த இயக்கத்தின் நோக்கத்தை மிகத் துல்லியமாக மதிப்பீடு செய்த கம்யூனிஸ்டுகளாலும் வழி நடத்திச் செல்லப்பட்டது."
- அலெக்சாந்தர் ஃபதேயெவ்
Be the first to rate this book.