காதலும் காமமும் வன்மமும் பகையும் உறவும் பிரிவுமாக இணைகள் சூழ வாய்ந்த வாழ்வு கடக்கும் வெளி ஆச்சரியங்களோடும் அலாதியான அன்போடும் அதற்கு நிகரான தீராப் பகையோடும் உன்னதமான பகிர்தலோடும் புரிந்துகொள்ள இயலாச் சுயநலத்தோடும் நிரம்பித் ததும்புகிறது. முறிமருந்தில் செழுமைமிக்க பால்யத்தைக் கடந்து உறவுகளும் உணர்வுகளும் துயரத்தில் கட்டுண்டு வாழ்வை அதன் போக்கில் கடக்கின்றன. உறவின் கூடுகள் நம் கண்முன்னே சிதைந்துகிடக்க, வாழ வக்கற்றவர்களாக்கி ஊரைவிட்டே வெளியேறச் செய்யும் உறவுகளின் வன்மம் துயரத்தின் வெம்மையை நம்மீது கவிழ்க்கிறது.
Be the first to rate this book.