மரபார்ந்த கதைக்களன்களிலிருந்து மாறுபட்டுச் செல்கின்றன லாவண்யாவின் சிறுகதைகள். தகவல் தொழில்நுட்பத் துறையில் பெண்களின் இருப்பு, அவர்களின் பிரத்யேகமான பிரச்சினைகள், துறை சார்ந்த நெருக்கடிகள், குடும்ப -சக பணியாளர்களுடனான உறவுகளில் ஏற்படும் மாற்றங்கள், விரிசல்கள், உறவுச் சிக்கல்கள் ஆகியவற்றை இவரின் சிறுகதைகள் கவனப்படுத்துகின்றன. இவை பெண்களின் கதைகள் மட்டுமன்று. ஆண்களின் பிரச்சினைகளும் அவை அவர்களைச் சிதைக்கும் வழிவகைகளையும் ஆராய முயலும் கதைகள். பெண்ணின் நோக்கிலிருந்து சொல்லப்படாததே இந்தக் கதைகளின் முக்கிய அம்சம். அமைப்புகளின் வன்முறை, அதிலிருந்து மீளத் தடுமாறும் மனிதர்கள் எனப் புனைவுலகின் எல்லைகளை இக்கதைகள் விரிவுபடுத்துகின்றன. புதிய களம், புதிய வாசிப்பனுபவம்.
Be the first to rate this book.