வெளியானபோதே, பிரான்சில் பல இலக்கியப் பரிசுகளுக்குப்
பரிந்துரைக்கப்பட்ட ஹெர்வேயின் இந்த நாவல் 2020ஆம் ஆண்டின் கோன்கூர் விருதைப் பெற்றது.
ஜனவரி 4, 2021 அன்று, 'முரண்பாடு' நாவல் 8,20,000 பிரதிகளும் மே 6, 2021 அன்று ஒரு மில்லியன் பிரதிகளும் வெளியிடப்பட்டன. 'முரண்பாடு' நாவல் 45 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், டென்மார்க், உஸ்பெகிஸ்தான், எஸ்டோனியா போன்ற நாடுகளில் வெளியிடப்பட்டது. நாவல்களின் நாவல் போலக் கட்டமைக்கப்பட்ட, ‘முரண்பாடு' நாவல், பல கதாபாத்திரங்களை அறிமுகம் செய்தபடி துவங்குகிறது. பாரிஸ் நியூயார்க் விமானப் பயணத்தின்போது ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சிதான் இந்த அனைத்துக் கதாபாத்திரங்களுக்கும் இடையிலான இணைப்பாக இருக்கிறது. மேலும், கதையின் போக்கில் ஒரு கதாபாத்திரம், 'முரண்பாடு' என்ற தலைப்பிலேயே ஒரு புத்தகம் எழுதுவது போல் காட்சியமைக்கப்பட்டிருப்பது நம் கவனத்தை ஈர்க்கின்றது.
நாவல் இலக்கியக் குறிப்புகள், குறிப்பாக பதிப்பு உலகத்தைப் பற்றிய செய்திகள், அமெரிக்கப் போர்களின் வன்முறை, ஆப்பிரிக்காவில் ஓரினச் சேர்க்கையின் எதிர்ப்பு பற்றிய பல விமர்சன செய்திகளை, 'முரண்பாடு' நாவலில் நாம் காணலாம்.
Be the first to rate this book.