தற்கால முஸ்லிம் உலகப் பீடித்திருக்கும் பாரிய பிரச்சினை 'உம்மா'வின் மத்தியில் வியாபகம் பெற்றுவரும் முரண்பாடுகள். அவற்றைக் கையாள்வதற்காக இஸ்லாம் அமைத்துத் தந்திருக்கும் வழிமுறைகளைச் சரிவர விளங்கிக் கொள்ளாமை காரணமாகவே முரண்பாடுகளும் பிரிவினைகளும் பூதாகர பிரச்சினைகளாக வடிவெடுத்துள்ளன.
முரண்பாடுகளினால் விளையக்கூடிய நன்மைகள் என்ன? இஸ்லாத்தின் ஆரம்ப தலைமுறையினர் அவற்றை சமூகத்தின் நலன்களுக்கானவையாக அமைத்துக் கொண்டது எவ்வாறு? பிரிவினைகளிலிருந்தும் சமூகத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக முரண்பாடுகளைக் கையாள்வதில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகள் யாவை? முரண்பாடுகள் எமக்குப் பாதகமாக அமையும் நிலையைத் தவிர்த்து, அவை எமக்குச் சாதகமாகச் செயல்படச் செய்வதற்கான வழிமுறைகள் என்ன? தெளிவான சிந்தனைகளை முன்வைக்கின்றது இந்த நூல்.
Be the first to rate this book.